districts

img

10ஆம் வகுப்பு மறு கூட்டலில் குளறுபடி தேர்வுத் துறை அலுவலகத்தில் முறையிட்ட பெற்றோர்

கடலூர், ஜூன் 6- 10ஆம் வகுப்பு மறு கூட்டலில் பல்வேறு குளறு படிகள் நடை பெற்றதாக குற்றம் சாட்டி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மஞ்சக்குப்பத்தில் உள்ள தேர்வுகள் துறை இயக்கு நர் அலுவலகத்தில் குவிந்த தால் பரபரப்பு ஏற்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அதில் மதிப்பெண் குறை பாடுகள் உள்ளவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க லாம் என்று தேர்வுகள் துறை அறிவித்தது. இதனை அடுத்து ஏராள மானவர்கள் மறு கூட்ட லுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதன் முடிவு தற்போது பெற்றோர்களுக்கு கிடைத்துள்ளது.

விடைத் தாளை பார்க்கும்போது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவர்கள் மஞ்சக் குப்பத்தில் உள்ள தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளனர். அவர்கள் முறையான பதில் அளிக்காததால் வாக்கு வாதம் ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு விடைத்தாளில் மதிப்பெண் கள் போடப்பட்டு அந்த மதிப்பெண் கூட்டல் கணக்கில் வரவில்லை

. மேலும் கேள்விக்கான விடை சரியாக உள்ளதாக டிக் மார்க் போடப் பட்டு மதிப்பெண் போடப்பட வில்லை, இப்படி பல்வேறு குறைபாடுகளோடு தேர்வு முடிவுகள் வந்துள்ளதாக பெற்றோர்களும் மாண வர்களும் குற்றம் சாட்டினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

;