districts

img

கடலூரில் வெள்ளி கடற்கரை புனரமைக்கும் பணி நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்றிடம் குறித்து ஆலோசனை

கடலூர்,ஜூன்6 - தேவனாம்பட்டினத்தில் வெள்ளி கடற்கரை புனர மைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முறையாக நடைபெற தற்போது நடைபாதை வியாபாரிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோ சனை கூட்டம் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்தபடியாக மிக நீளமான கடற்கரை தேவ னாம்பட்டினத்தில் உள்ள வெள்ளி கடற்கரை. இந்த கடற்கரை தானே புயலுக்கு பிறகு சிதில மடைந்து மிகவும் மோச மாக காணப்படுகிறது. சுற்று லாத்தலமாக விரிவு படுத்த வும், கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் நோக்கிலும், மானிய நிதி திட்டத்தின் கீழ்  ரூ.4 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய்து பூங்கா உள்ளிட்ட புனரமைப்பு பணி கள் நடைபெற்ற வருகிறது.

மேலும் அங்குள்ள நடை பாதைக்கு ரூ.2 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டுள்ளது. வெள்ளி கடற்கரையில் உணர வைக்க மேலும் பல்வேறு திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரி வித்து வருகிறது. இந்த நிலையில் தேவ னாம்பட்டினம் பகுதியில் 158 சிறு தின்பண்டக் கடைகள் இருந்து வருகின்றது. இந்தக் கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு இடத்தில் மாற்றுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணை யாளர் காந்திராஜ் தலைமை யில்  நடைபெற்றது.

இதில் வட்டாட்சியர் பல ராமன், மாநகராட்சி பொறி யாளர் ராஜசேகர், காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடலூர் தேவனாம்பட்டி னத்தில் உள்ள கடைகளில் அப்புறப்படுத்தி அதே பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.இதற்கு வியாபாரிகள் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும் வியா பாரம் தடைபடாமலும் கலந்தாலோசித்து இடம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

;