districts

img

உதகையில் புதிய மாற்றுசாலை: 80 சதவீகித பணிகள் நிறைவு

உதகை, ஜூன் 5– உதகையில் போடப்பட்டு வரும்  புதிய மாற்றுச்சாலை பணி, 80 சதவீ தம் நிறைவு பெற்றுள்ளது. என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மற்றும்  செப்டம்பர் மாதங்களில் கோடை  சீசன் நடைபெறுகிறது. இந்த கோடை  சீசனுக்கு வெளி மாநில, வெளிமா வட்ட மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதனால், உதகை நகரில் அவ்போது கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி றது. இதனால் சுற்றுலா வாகனங்கள்  போக்குவரத்து நெரிசலில் சிக்குவ தால், குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்க ளுக்கு சென்று பார்க்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது.  

இதனைக்கருத்தில் கொண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை மேட் டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், குன்னூருக்கு செல்லா மல் நேரடியாக உதகைக்கு செல்லும்  வகையில், ரூ. 40 கோடி ரூபாயில் புற வழிச்சாலை அமைத்து வருகிறது.

இந்த சாலை, 20.5 கி.மீ தொலைவு  கொண்டதாகும். இந்த புதிதாக உரு வாக்கப்படும் மாற்றுப்பாதையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன் னூர் மலைப்பாதையில் வரும் வாக னங்கள் காட்டேரி, சேலாஸ், கெந் தளா, கேத்தி பாலாடா, கொல்லி மலை, காந்திபேட்டை வழியாக உதகைக்கு செல்லும் வகையில்  சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பாலசந்திரன் கூறுகையில், குன்னூர்  – உதகை சாலையில் ஏற்படும் வாகன  நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில்  அமைக்கப்பட்ட புதிய மாற்றுச் சாலை பணி, 80 சதவீதம் நிறைவு  பெற்றுள்ளது. விரைவில் பயன்பாட் டுக்கு வரும் என்றார்.

;