திங்கள், மார்ச் 1, 2021

districts

img

தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவேந்தல்

ஈரோடு, ஜன.18- மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் எம்.என்.காளியண்ணனின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள் அந்தியூர் கீழ்வாணியில் ஞாயி றன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செங் கொடியை பவானி தாலுகாக்குழு உறுப்பி னர் ஏ.அய்யாவு ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி சிறப்புரையாற்றினார்.  மேலும், ஈரோடு மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், எஸ்.முத்துசாமி, பி.பி.பழனிச்சாமி, ஏ.எம்.முனுசாமி, அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், பவானி தாலுகா செயலா ளர் ஏ.ஜெகநாதன் ஆகியோர் நினைவு ரையாற்றினர்.

இதையடுத்து, எம்.என். காளியண்ணன் குடும்பத்தினரை கௌர வித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து அந்தியூர் தாலுகா பகுதி பொதுமக்களிடம் மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியாக பெறப்பட்ட ரூ.1 லட்சத்து 70  ஆயிரத்தையும், பவானி தாலுகா பகுதி பொதுமக்களிடம் பெறப்பட்ட ரூ.60 ஆயி ரத்தையும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.பத்ரியிடம் தாலுகா செயலாளர்கள் வழங்கினர். முன்னதாக, கடம்பூர் ஏ.எம்.காதர் நினைவு விடியல் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பொதுமக்கள் உட்பட 300க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

;