districts

img

மரங்கள் இல்லையெனில் எந்த உயிரினங்களும் இல்லை மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் பேச்சு

அரியலூர், ஜூன் 7 - மரங்கள் இல்லையெனில் எந்த உயி ரினங்களும் இல்லை என்றார் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி, அரியலூரை அடுத்த சிறுவ ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில், “மரக் கன்றுகளை நட்டு இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய இடமான இந்த பூமியை காப்பது அனைத்து தரப்பு மக்களின் தலையாயக் கடமை யாகும். சுற்றுச்சூழல் பாதிப்படைவ தால் இந்த ஆண்டு கடும் வெப்ப அலை  தாக்குதலுக்கு நாம் ஆளாகி கொண் டிருக்கிறோம்.

நமது தேசம் அடுத்த ஆண்டும் இத்த கைய பாதிப்பை எதிர்நோக்கக் கூடாது  எனில், அனைத்து தரப்பு மக்களும்  ஒருங்கிணைந்து, தங்களால் இயன்ற வரை பொது இடங்களிலும் தனியார் இடங்களிலும் மரக்கன்றுகளை நட  வேண்டும். மனிதர்கள் இல்லாவிட்டா லும் மரங்கள் உயிர் வாழும். ஆனால் மரங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் மட்டுமல்ல; எந்த உயிரினங்களும் உயிர் வாழ முடியாது” என்றார். 

பின்னர் அவர், பள்ளி வளாகத்தில்  மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சில்ட்ரன் டிரஸ்ட்  ஒருங்கிணைப்பாளர் நிக்கில் ராஜ், ஆசி ரியை செந்தமிழ் செல்வி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

சரணாலயத்தில்...

முன்னதாக, அரியலூரை அடுத்த  கரைவெட்டி பறவைகள் சரணாலயத் தில், வனத்துறை சார்பில் விழிப்புணர்வு  நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மாவட்ட வன அலுவலர் இளங்கோவன்,  மரக்கன்றுகளை நட்டார். பின்னர் சுற்றுச் சூழல் குறித்து நடத்தப்பட்ட ஓவியப்  போட்டிகளில் வென்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், அரியலூர் வனச் சரக  அலுவலர் ச.முத்துமணி, வனவர் பாண்டியன், வன காப்பாளர்கள் பால சுப்பிரமணி, விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்பு ணர்வு நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலை வர் ராஜசேகர் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் மற்றும் வரலாற்று துறைத் தலைவர் ரவி உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
 

;