அரியலூர், ஜூன் 7- ராஜேந்திர சோழன் வாழ்ந்த அரண்மனையான மாளிகைமேடு அகழாய்வு பாதுகாப்பு கொட்டகை கனமழையால் சரிந்து விழுந்தது. இதனால் வரலாற்றுச் சுவடுகள் பாதிக்கப்படும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழ னால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இது யுனெஸ்கோ வால் பாரம்பரிய சின்னமாக அறி விக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரு கிறது.
தமிழக முழுவதும் கீழடி, ஆதிச்ச நல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் அகழாய்வு பணிகள் நடை பெற்று வருவதைப் போன்று, கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் மாமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் வாழ்ந்த அரண் மனை மற்றும் வரலாற்று செப்பேடு களை அறியும் விதமாக அகழாய்வு பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை சுவர்கள், சீன வளையல்கள், மண்பாண்டங்கள், பனை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாளிகை மேட்டில் அகழாய்வு பணிகளின் போது கிடைத்தவற்றை மழையிலிருந்து பாதுகாப்பதற்காக கீற்றுகளால் பின்னப்பட்ட ராட்சத கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழைக்கு தாக்குப் பிடிக்காத அகழாய்வு ராட்சத கொட்டகை, வியாழனன்று திடீரென சரிந்து கீழே விழுந்தது.
இதனால் கண்டெ டுக்கப்பட்ட அரண்மனை சுவர்கள் மற்றும் வரலாற்று செப்பேடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ள தாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலை யில், மாளிகை மேட்டில் இந்த ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்க வில்லை. எனவே மாளிகைமேடு அக ழாய்வுப் பாதுகாப்பு கொட்டையை சீரமைத்து உடனடியாக அகழாய்வு பணிகளை தொடங்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர்.
அருங்காட்சியகத்தை உட்கோட்டையில் அமைத்திடுக!
ராஜேந்திர சோழனின் வர லாற்றுச் சுவடுகளை, இக்கால தலை முறைகள் அறிந்து கொள்ளும் வகையில் பணிகள் மீண்டும் நடை பெற வேண்டும். தற்போது மழை யால் சாய்ந்துள்ள ராட்சத கொட்ட கையை சீரமைத்து அகழாய்ச்சி பணியை தொடங்க வேண்டும். மாளிகை மேடு அருகிலேயே ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கேயே அருங்காட்சியகம் அமைத்தால் சுற்றுலாப் பயணிகள் காண வசதி யாக இருக்கும். இதனால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். எனவே அருங்காட்சியகத்தை உட்கோட்டை யில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.