districts

img

கிறிஸ்தவ பாதிரியார்கள் முன்னிலையில் நடந்தேறிய கோயில் குடமுழுக்கு!

அரியலூர், மே 20 - ‘இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்’ என்ற பொன் மொழிக்கு ஏற்றவாறு, நம் இந்திய திருநாட்டில் மதத்தால் பிரிந்த போதும், வேற்றுமையில் ஒற்றுமை காண் பதே நம்முடைய பண்பாடாக இருந்து வருகிறது. இதைப் பறைசாற்றும் வகை யில், ஒரு அற்புதமான, நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.  அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ளது நடுவலூர் கிராமம்.

இந்து மக்களும், கிறிஸ்தவர் களும் இணைந்து வாழும் இந்த  கிராமம், கோவில்களும், தேவாலயங் களும் நிறைந்த பகுதியாகும். இந்நிலையில், விநாயகர், மாரி யம்மன், அய்யனார், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் குட முழுக்கு விழாவை ஒன்றாக நடத்த திட்ட மிட்ட ஊர் பொதுமக்கள், அந்த விழா விற்கு கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.  அதன்படி நடுவலூர் புனித சூசையப்பர் ஆலய பாதிரியார்கள் ராபர்ட் மற்றும் ஜோசப் தன்ராஜ் ஆகி யோர் கோயில் கோபுரத்தின் உச்சிக்கே  சென்று குடமுழுக்கில் கலந்து கொண் டதுடன், மற்ற மதத்தைச் சேர்ந்த  கட வுளாக இருந்தாலும், கைகூப்பி வணங்கி நயத்தகு நாகரிகர்களாக நடந்து கொண்டனர்.

அங்கிருந்த கோயில் நிர்வாகிகளும், பாதிரியார் கள் முன்னிலையில், கோவில் சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் குடமுழுக்கை நடத்தி முடித்தனர். முன்னதாக, குடமுழுக்கில் கலந்து  கொள்ள வந்த பாதிரியார்கள் ராபர்ட் மற்றும் ஜோசப் தன்ராஜ் ஆகியோ ருக்கு கிராமமே திரண்டு உற்சாக வர வேற்பு அளித்துள்ளது. குடமுழுக்கின் நிறைவிலும் பாதிரியார்களுக்கு ஊர்ப்  பொதுமக்கள் சார்பில் சிறப்பு செய்யப் பட்டுள்ளது.

அத்துடன் அங்கிருந்த இளைஞர்கள், பொதுமக்கள், பாதிரி யார்களோடு ‘செல்பி’ எடுத்தும் தங் களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.  மத நல்லிணக்கத்திற்கு உதாரண மான நடுவலூர் மக்களின் இந்த செயல் சமூகவலைதளவாசிகளின் வாழ்த்தையும், பாராட்டையும் பெற்று வைரலாகி வருகிறது.

;