districts

சிபிஎம் கொடிக் கம்பத்தை பிடுங்கி எறிந்தவர் மீது நடவடிக்கை கோரி புகார்

அரியலூர், செப்.19 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் ரேசன் கடை முன்பு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் எம்.வெங்கடாசலம் தலை மையில் தேசியக்கொடி மற்றும் சிபிஎம் செங்கொடிகள் ஏற்றுவதற்காக இரண்டு கம்பங்கள் நடப்பட்டு, மாநிலக் குழு உறுப்பி னர் வாலண்டினா 2 கொடிகளையும் ஏற்றி வைத்து கம்பம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அதன் அருகில் ஏரிக்கரை யில் உள்ள ஒரு கோயிலில் கும்பாபிஷே கம் நடைபெற்றது. அப்போது கோயில் கும்பா பிஷேகத்திற்காக விளம்பர பேனர்கள் வைத்த சிலர், இரண்டு கொடிக் கம்பத்தை யும் பிடுங்கி எறிந்துவிட்டு அதில் விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர். அனைத்து கட்சி  கொடிக் கம்பங்களும் உள்ள நிலையில், சிபிஎம் கொடிக் கம்பத்தை மட்டும் பிடுங்கி  எறிந்துள்ளனர்,  இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்  நிலையத்தில் சிபிஎம் உறுப்பினர் சூரிய மணலை சேர்ந்த தனவேல் புகார் அளித்தும்,  சம்பந்தப்பட்ட மர்ம நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சி யம் காட்டி வருகின்றனர். இதில் சம்பந்தப் பட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

;