மதுரை, டிச.9- ஒரு முதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதல்வர் வேலை பார்த்து வரு கிறார். அவரை பாராட்டாவிட்டாலும் அவர் மீது அவதூறு பரப்புவது போன்ற செயல்களை தவிர்க்கலாம் என உயர் நீதி மன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்தார். நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி யை மீறும் வகையில் செயல்பட்டதால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப் பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.