court

img

மனித குலத்திற்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை - உயர்நீதிமன்றம் கருத்து!

மனித குலத்திற்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் டி கல்விக்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் நெல் மூட்டைகள் வைத்துள்ளதாகவும், அதற்குத் தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தரம் மற்றும் டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "விவசாயிகள் கோவில் நிலத்தில் நெல் மூட்டைகளை தற்காலிகமாக வைத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. மனித குலத்திற்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை எனத் தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கை தள்ளுபடி செய்தனர்.