court

img

உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்...

சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட நீதிபதி பணியிடங்கள் 75 ஆகும். ஆனால் தற்போது 54 நீதிபதிகள் உள்ளனர். இதனால் 21 நீதிபதி பணியிடங் கள் காலியாக இருந்து வந்தன.இந்நிலையில், பதவி மூப்பு அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த மாவட்ட நீதிபதிகளின் பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது.அந்தப் பட்டியலில் மாவட்ட நீதிபதிகளான ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங் கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம் மாள் சண்முக சுந்தரம், சத்திகுமார் சுகுமார குரூப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ் செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

கணவன்-மனைவி
இவர்களில் நீதிபதிகள் கே.முரளிசங்கர், தமிழ் செல்வி ஆகியோர் கணவன் மனைவி ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை பட்டியலுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் ராஜீந்தர் காஷ்யாப் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக 10 நீதிபதிக ளுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும். இதனால் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கை 11ஆக குறைந்துள்ளது.

;