court

img

ஆளுநரின் செயல் கூட்டாட்சி அமைப்பை அழித்துவிடும்

சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இதுவரை லட்சக்கணக்கான மக்களுக்கு வீடு களைக் கட்டித்தந்துள்ளது. மனைகளை நியாய மான விலையில் விற்று ஏராளமானோரின் வீட்டுக் கனவை நனவாக்கியுள்ளது. 

கட்டுமானத்தில் சில குறைபாடுகள் இருந்தா லும் மக்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாகத் தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியம்  திகழ்கிறது. அப்ப டிப்பட்ட வீட்டுவசதி வாரியம் கடந்த அதிமுக ஆட்சியில்  சீரழிக்கப்பட்டது. சந்தையில் அதிக விலைபோகக்கூடிய ஏராளமான மனைகள் வாரி யத்தின் கைவசம் இருந்தன.  அவற்றை அதிமுக ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பம்போல் தனி யாருக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும் குறைந்த விலைக்கு விற்றனர்.   சில இடங்களில் பழுதான வீடுகள் இடிக்கப்பட்டு அந்த இடங்கள் தனியார் கட்டுமான நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த மானியக்கோரிக்கையில்  “ வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் இனி தனியார் கட்டு மான நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியில் கட்டப்படும்; கூட்டு முயற்சி ஒப்பந் தத்தின்படி வீட்டு வசதி வாரியத்திற்கு கிடைக்கும் வீடுகளைக் கூட தனியார் கட்டுமான நிறுவனங்க ளிடம் விற்பனை செய்ய விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன ’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த யோசனை ஆபத்தானது. தனியார் பங்க ளிப்போடு மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், வீட்டு வசதி வாரியம் எதற்காக ஏற்படுத்தப்பட்ட தோ அதற்கான  நோக்கத்தைச் சிதைத்துவிடும். 

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஏழை, நடுத்தர மக்களின் வீட்டுக் கனவை நிறை வேற்றுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந் தோர், குறைந்த வருவாய் பிரிவு , மத்திய வரு வாய் பிரிவு மற்றும் உயர் வருவாய் பிரிவின ருக்கு வீடுகளைக் கட்டித்தருகிறது.  அனைவ ருக்கும் வீடு என்ற இலக்கு இதுவரை எட்டப் படவில்லை என்றாலும் , அதற்கான திசையை நோக்கி வாரியம் பயணிக்கிறது. 

கூட்டு முயற்சியில் தனியாருடன் இணைந்து கட்டப்படும் வீடுகளின் விலைகள் ஏழைக ளால் வாங்க முடியாத அளவுக்கு இருக்கும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனியார் நிறுவ னங்களின் வீடுகளை நடுத்தர மக்கள் கூட தற்போது வாங்கமுடியவில்லை. அந்தளவுக்குக் கட்டணம் மிக மிக அதிகமாக உள்ளது. “நிலம் கொடுத்ததற்கு ஈடாக வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கப்படும் வீடுகளையும் கட்டுமான நிறுவ னத்திடமே வாரியம் விற்கும் ’’ என்ற  விதி செயல் படுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடு என்ற கனவு நிறைவேறாது. 

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தலைசிறந்த பொறியாளர்கள் வீட்டு  வசதி வாரியத்தில் உள்ளனர். வாரியம் நினைத் தால் தனியார் நிறுவனங்களை விடத் தரமான, அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும். எனவே, தனியார்துறை கூட்டு முயற்சி யில் வீடுகளைக் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வீட்டு வசதி வாரியமே செயல் படுத்த வேண்டும்.

;