அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்' உள்ளிட்ட அரசின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராக சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
"சட்டத்தை தவறாக புரிந்துகொண்டு சி.வி.சண்முகம் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்றும், அரசியல் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள். அரசியல் சண்டைக்கு இதுதான் இடமா?குறிப்பிட்ட ஒரு ஆட்சியின் திட்டத்தை மட்டும் எதிர்க்கும் உங்களது நோக்கம் உள்நோக்கம் கொண்டது" என கூறிய உச்சநீதிமன்றம், சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மேலும், அபராதத்தை ஒரு வாரத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் செலுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.