court

img

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு - அனைத்து மாநில அரசுகளும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

குடியரசுத் தலைவரின் 14 கேள்வி

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது  குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். குடியரசுத் தலை வர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசு கள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்” எனக் கூறி, முதன்முறை யாக உச்சநீதிமன்றம் குடியரசுத் தலை வருக்கு காலக்கெடு நிர்ணயித்தது. தொடர்ந்து, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடி வெடுக்க காலக்கெடு விதித்தது தொடர் பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்வி களை எழுப்பினார். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை அன்று விசா ரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு,  “குடி யரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்வி கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.