court

img

விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

விவிபேட் வழக்கில், தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் அனைத்து ஒப்புகைச்சீட்டுகளை 100% சரிப்பார்க்க உத்தரவிடக் கோரி ஏ.டி.ஆர் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இதில் விவிபேட் இயந்திரம் குறித்து பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.
"மைக்ரோ கண்ட்ரோலர் விவிபேடுக்குள் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது கண்ட்ரோல் யூனிட்டுக்குள் பொருத்தப்பட்டுள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் ஒரு முறை மட்டுமே ப்ரோகிராம் செய்யக்கூடியதா? இதில் எத்தனை கட்சி சின்னங்கள் சேர்க்கும் யூனிட்கள் உள்ளன? தேர்தல் முடிந்த பிறகு, தேர்தல் மனுக்களை தாக்கல் செய்ய 45 நாட்கள் வரை உள்ள நிலையில், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை ஏன் 60 நாட்கள் வரை சேமித்து வைக்க கூடாது? ஈ.வி.எம்-களை பாதுகாப்பாக வைத்திட கண்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் இரண்டுக்கும் சீல் வைக்கப்படுமா?” ஆகிய கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

;