court

img

பீகார் SIR: தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக - தேர்தல் ஆணையத்தின் கள்ளக் கூட்டணி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை நீக்கியுள்ளது.  இதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடர் விசாரணையாக நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்என தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.