court

img

பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை இன்று ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ.24- பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி யை இன்று ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக கொலையாளிகள் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர்  கொடுத்த மேல் முறையீட்டு மனு மீது விசாரணை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஒரு வார மாக நடைபெற்று வருகிறது.  சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர்   தன்னுடன் படித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த   சுவாதி யுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்  கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலில் சாமி  கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை.  இந்நிலையில் நாமக்கல்லில் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்  பாக தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவ ராஜ் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்த னர். நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு பின்னர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 106 சாட்சிகளில் சுவாதி உள்ளிட்ட 72 சாட்சிகள் குறுக்கு விசாரணை  செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சங்கர், அருள்  செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் உள்  ளிட்ட 5  பேர் விடுதலை செய்யப்பட்டனர். யுவராஜ்  உள்ளிட்ட 10 பேர் கொலையாளிகளாக அறிவித்து  தீர்ப்பளிக்கப்பட்டது. யுவராஜுக்கு சாகும் வரை  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்ப ளித்தார். 

இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவ ராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், இந்த வழக்கில் சங்கர் உள்  ளிட்ட  5 பேரையும் விடுதலை செய்ததை எதிர்த்து  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சுந்தரேசன், ரமேஷ், அசோக் குமார், அனந்தபத்மநாபன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். யுவராஜ் மேல்முறை யீட்டு மனுவை ஆட்சேபித்து வழக்கறிஞர்கள் பவானி மோகன், லஜபதிராய் உள்ளிட்ட வழக்கறி ஞர்கள் வாதாடுகிறார்கள். கடந்த நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மனுவின் மீது காரசார விவா தம் நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஒரு வார மாக விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும்  இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேரை விடுவித்தது  தவறு என்றும் அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கொலையாளிகளுக்கு எதிராக  வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகிறார்கள்.   இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்  பாக வியாழனன்று நடைபெற்றது. 

இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்கக் காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சி யாக இருந்துள்ளார். ஆனால் அதற்கும் 164 வாக்கு மூலத்தை வழங்கியதற்கும் இடையில் ஏதோ நிகழ்ந்துள்ளது. கீழமை நீதிமன்றமும் அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல்  சுவாதி யின் சாட்சியை நிராகரித்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப் போல தவறுக்கு எதிராக சமநிலையை பேண இய லாது. நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப் படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சி யாக விசாரிக்க விரும்புகிறது. இது கட்டாயம்  தேவையானது எனவும் தவறினால் நீதித்துறையின்  தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனவும்  தோன்றுகிறது. நாமக்கல் காவல் கண்காணிப்பா ளர், போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவா திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, போனில் பேசுவதோ கூடாது. சுவாதியின் பெற்றோ ருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான  பாதுகாப்பு வழங்க வேண்டும். சாட்சி சுவாதி பய மின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி சாட்சி சுவா தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  வெள்ளியன்று வழக்கறிஞர்  பவானி மோகன்  வாதாடுகிறார். கொலையாளிகள் மேல் முறை யீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? ஏற்கனவே விடுவித்த 5 பேரின் விடுதலை ரத்து செய்யப் படுமா? என்று நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

;