சென்னை:
ஒரே கல்வியாண்டில் இரட்டைப் பட்டப்படிப்பை அங்கீகரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒரே கல்வியாண்டில் நேரடியாக தொலை தூரக் கல்வி மூலம் பெற்ற 2 பட்டங்களை அங்கீகரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணை மூன்று நீதிபதிகள்கொண்ட அமர்வு முன்பு வெள்ளியன்று நடை பெற்றது. அப்போது, ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்று யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரட்டைப் பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறியது.இதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஒரே கல்வியாண்டில் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்கும் வரை அங்கீகரிக்க முடியாது. தொலைதூர கல்வியாளர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் அனுபவம் கிடையாது என்றும் தெரிவித்தனர்.