பாஜக முன்னாள் எம்.பிக்கு மரண தண்டனை வழங்க NIA கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகர் குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாசிங் தாக்கூருக்கு மரண தண்டனை விதிக்க சிறப்பு நீதிமன்றத்தில் NIA எழுத்துப்பூர்வமான வாதத்தை சமர்ப்பித்துள்ளது.
மேலும் 17 வருடமாக நடைபெறும் இந்த வழக்கில் வரும் மே 8ஆம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.