மதுரை:
நடப்பாண்டு எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி, அல்லது தேனி மருத்துவக் கல்லூரியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளியன்று தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “2018-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால்வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை உருவாக்கி வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையைத் தொடங்க உரிய உத்தரவுபிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தற்காலிக கட்டடங்களில் மாணவர் சேர்க்கைக்கு தயார் என தெரிவித்திருந்தது அதே போல தமிழ்நாடு அரசும்ஒன்றிய அரசின் அனைத்து நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்புத் தரத் தயார் எனத்தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு வெள்ளியன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிக்கை கொடுத்திருந்தார். இந்த அறிக்கையை தமிக அரசின் மூத்த வழக்கறிஞர் வீரா.கதிரவன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வெள்ளியன்று தாக்கல் செய்தார்.அறிக்கையில், “ஏற்கனவே ஐம்பது மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பிற மாநிலங்களில் அந்ததந்த மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தற்காலிகமாக தொடங்கி உள்ளது..தமிழ்நாடு அரசு நடப்பாண்டு தேனி மருத்துவக் கல்லூரி, சிவகங்கை மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் தற்காலிக மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு தயாராக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து இதில் பொருத்தமான மருத்துவக்கல்லூரியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அனைத்துநடவடிக்கைக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது”.