court

img

உ.பி மதராசா கல்விச் சட்டம்: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

உத்தரப் பிரதேசத்தில் 2004 மதராசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதராசா கல்விச் சட்டம், சட்ட விரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி அதனை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், மதராசா கல்விச் சட்டத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது; மதராசாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாமே தவிர, மதராசா கல்விச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இச்சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.