சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட், கேரளம், ஆந்திரப்பிர தேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களின் சிறைச்சாலைகளில் சாதியப் பாகுபாடு காட்டப்படுவதாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுகன்யா சாந்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறைகளில், சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரவும், சிறை கையேடுகளில் குற்றவாளிகளின் சாதியை குறிப்பிடாமல், சட்ட வரையறைகளின்படி இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறைச்சாலை விதிகளில் தேவையான மாற்றங்களைச் செய்து சாதி அடிப்படையிலான பிரிவினைக்கு தீர்வு காண ஒன்றிய அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.