புதுதில்லி:
உத்தரப்பிரதேச ஷியா பிரிவு முஸ்லிம்களின் சர்ச்சைக்குரியத் தலைவராகக் கருதப்படுபவர் வசீம் ரிஜ்வீ. இவர் கடந்த மாதம், முஸ்லிம்களின் புனிதக் குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும் என்று கோரிஉச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். இவை முஸ்லிம்கள் இடையே தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அதில் தெரிவித்திருந் தார்.
இதனால், ரிஜ்வீ புனிதக் குர்ஆனையும், இறைத்தூதரான முகம்மது நபியையும் அவமதித்து விட்டதாக ஷியா மற்றும் சன்னிஆகிய இரண்டு பிரிவு முஸ்லிம்கள் இடையிலும் புகார் எழுந்துள்ளது. இவரது மனுவைதள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், இதற்காக ரிஜ்வீயை கைது செய்து அவரைதேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரப்பிரதேச முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். ஆக்ரா, பரேலிஉள்ளிட்ட சில மாவட்டங்களின் காவல்நிலையங்களிலும் ரிஜ்வீ மீது சில முஸ்லிம் அமைப்புகள் வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில், திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் வசீம் ரிஜ்வீயின் மனுவை நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.விசாரணையின் போது, ‘‘இம்மனுவை விசாரிப்பதில் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்களா?’’ என்று அமர்வின் தலைமை நீதிபதியான நாரிமன், மனுதாரரின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதற்குஅவர் ஆம் என்று பதில் கூறியதைத் தொடர்ந்து, ‘‘இந்த மனு ஒரு அற்பமான செயலுக்கானது. அதற்காக, வசீம் ரிஜ்வீக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அயோத்திவழக்கிலும் வசீம் ரிஜ்வீ, துவக்கம் முதலாகராமர் கோயிலுக்கு ஆதரவான கருத்துக் களை தெரிவித்து வந்தார். சன்னி பிரிவு முஸ்லிம்களின் மற்ற விவகாரங்களிலும் ரிஜ்வீ கூறிய கருத்துக்கள் கண்டனத்திற்கு உள்ளாகின. இந்த வழக்கை தொடுத்தமைக்காக வசீம் ரிஜ்வீயை கண்டித்து தேசிய சிறுபான்மை நல ஆணையமும் நோட்டீஸ் அளித்திருந்தது.