court

img

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு.... ஆலையில் அரசே உற்பத்தி செய்ய நீதிமன்றம் யோசனை.....

புதுதில்லி:
ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கைஇல்லை. ஆகையால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின்னரே தமிழக அரசு, ஆலையை மூடி சீல்வைத்தது.  ஆலைக்கு சீல் வைக்கப் பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்யஅனுமதி வழங்க வேண்டும் எனவேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத் தில்  இடைக்கால மனு  தாக்கல்செய்தது. ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பில்உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23 வெள்ளியன்று மீண்டும்நடைபெற்ற விசாரணையில், அப்போது, ஸ்டெர்லைட்டை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக மாவட்டஆட்சியர்  அறிக்கை அனுப்பியிருப்ப தாகவும், அதனால் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள வேறு ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று தமிழக அரசு கூறியது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பாப்டே, ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார். ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக அரசுக்கும்,மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. 1 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம் என நீதிபதி தெரிவித்தார்.  இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ஆலையை திறந்தால்சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தேசியப் பேரிடர் மேலாண்மைசட்டப்படி மத்திய அரசே ஆலையை கைப்பற்றி ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்றார். மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்வதா? என கேள்வி எழுப்பினார். சட்டம்ஒழுங்கை காரணம் காட்டி ஆலையைதிறக்க முடியாது என சொல்லக்கூடாது என்றார். மேலும் ஏப்ரல் 26 திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.