புதுதில்லி,நவம்பர்.06- 7500 கிலோ எடை குறைவான வாகனங்களை இயக்க இலகு ரக ஓட்டுநர் உரிமம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போக்குவரத்து வாகனம் 7500 கிலோ எடைக்குள் இருந்தால் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் அதனை இயக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7500 கிலோவிற்கு மேல் இருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே போக்குவரத்து வாகனங்களுக்கான விதிமுறைகள், நிபந்தனைகளும் பொருந்தும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.