புதுதில்லி,மார்ச்.23- நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கிய நிலையில் அவர் எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது எனவும் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்க கூடாது எனவும் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமாருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாரணைக்காக பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.