court

img

கோவிட் காலத்தில் நீதி உறுதி செய்யப்பட வேண்டும்... உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்...

புதுதில்லி:
கோவிட் சூழலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதியை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களை கேட்டுக்கொண்டுள்ளது.நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வு, உயர்நீதிமன்ற நீதிபதிகளில் குறைந்தது பாதி அளவாவது மாற்று நாட்களில் ஆஜராகி, பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறவர்களின் மனுக்களை பரிசீலிக்க தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதில் ஓராண்டு தாமதம் ஏற்படுத்தியதை அடுத்து உச்ச நீதிமன்றம் தலையிட்டது. நிரந்தர ஜாமீனுக்கான மனு ஒரு வருடத்திற்கும் மேலாகபட்டியலிடப்படவில்லை என்பது கைதிகளின் உரிமைகளை மோசமாக பாதித்துள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.