court

img

ஒருவ்வொருவரின் கருத்துரிமையும் மதிக்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதுதில்லி,மார்ச்.28- காங்கிரஸ் எம்.பி. இம்ரான் ப்ரதாப்கார்ஹி மீதான வழக்கை ரத்து செய்ததோடு கருத்துரிமை மதிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
"ஓ ரத்தவெறி கொண்டவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்” எனத் தொடங்கும் கவிதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததற்காக காங்கிரஸ் எம்.பி. இம்ரான் ப்ரதாப்கார்ஹி மீது குஜராத் போலீசார் பதிவு செய்த வழக்கை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும் ஒருவரின் கருத்து பெரும்பாலோனோருக்கு பிடிக்கவில்லை என்றாலும், அந்நபரின் கருத்து சொல்லும் உரிமை மதிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும் எனவும் . கவிதைகள், நாடகங்கள், கலைகள் ஆகியவை, மனிதர்கள் வாழ்வை மேலும் அர்த்தமாக்குகின்றன எனவும் நீதிபதிகள் அபய் ஓஹா, உஜ்ஜால் புயான் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.