court

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

புதுதில்லி, செப்.13- தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
   கடந்த மார்ச் 21 ஆம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையிலிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது ஆனால் வேறு ஒரு வழக்கில் சிபிஐ அவரை கைது செய்ததால் அவரால் சிறையிலிருந்து வெளிவர முடியவில்லை இந்நிலையில் சிபிஐ வழக்கில் அவர் அளித்திருந்த ஜாமின் மனுக்கான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்த 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் 5 மாதங்களுக்குப் பிறகு கெஜ்ரிவால் விடுதலையாகிறார்.