ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணையில் ஒன்றிய அரசின் சீலிட்ட பரிந்துரை கவரை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணையில் "செபி" ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்த குழு அமைப்பது தொடர்பான ஒன்றிய அரசின் சீலிட்ட கவர் பரிந்துரையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
இதுபற்றி விளக்கம் அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் குழுவை நீதிமன்றம் ஏர்றுக்கொண்டதாக இருக்க கூடாது . கவரில் உள்ள விவரங்களை பொதுவெளியில் ஒன்றிய அரசு முன்வைக்க வேண்டும். ஆனால் இறுதி முடிவை நீதிமன்றம் எடுக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசு பரிந்துரைத்த நிபுணர்கள் குழுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.