கொச்சி:
கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோசைப் பெறுவதில் 84 நாட்கள் தாமதம் ஏன் என்று கேரள உயர் நீதிமன்றம் கேட்டது. தடுப்பூசியின் தன்மை அல்லது செயல்திறன் தடுப்பூசியின் அளவுகோலா என்பதை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
கிட்டெக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. நிறுவனம் தனது ஊழியர்களுக்காக தடுப்பூசியை வாங்கி சேமித்து வைத்துள்ளது. 45 நாட்களுக்குப் பிறகு முதல் டோஸை எடுத்துக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுக்க நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இருப்பினும், 84 நாட்களுக்கு முன்பு இரண்டாவது டோஸை அரசாங்கம்அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இது தொடர்பாக ஒன்றிய அரசுஒரு நிலைப்பாட்டைஎடுக்க வேண்டும் என்பதே மாநில அரசின் பதில். அதைத்தொடர்ந்து நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது.