சென்னை,பிப்.04- பறிமுதல் செய்த பத்திரிகையாளர்களின் செல்போன்களை திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR கசிந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு பத்திரிகையாளர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்தது. காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்த செல்போன்களை திரும்ப ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதோடு. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.