court

img

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம்,அக்.05- நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீட்சகர்கள் கோயில் நிலங்களைப் பராமரிக்காததால் சுமார் 3,000 ஏக்கர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் 12 வாரத்திற்குள் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.