court

img

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பண்டிகை காலங்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சரவெடிக்கு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜூன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலன் கருதி பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், சரவெடி மற்றும் பேரியம் பட்டாசுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.