court

img

கொரோனா நோயாளியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது.... உச்சநீதிமன்றம் உத்தரவு...

புதுதில்லி:
கொரோனாவால் தனிமைப்படுத்தப்படுவோர் வீட்டில் உரிய அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் வீட்டிற்கு வெளியே, இங்கு கொரோனாபாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.

இதில் தில்லியை சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த  பொதுநல மனுவில், கொரோனா தொற்றால் பாதிப்படையும் நபர்களின் குடியிருப்பு விவரம், அவர்களின் பெயர் உள்ளிட்ட தனி நபர் விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்படுவது சம்பந்தப்பட்ட நபருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது. எனவே ஒருவரின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில், இது போன்று சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு ஏதுவாக மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிறப்பித்துள்ள ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் பல்வேறு நாட்கள் நடைபெற்றது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கையில், இது போன்ற நோட்டீஸ் ஒட்ட மாநில அரசுகளுக்கு நாங்கள் எந்தஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் இது மாநிலஅரசுகள் எடுத்த முடிவு. மேலும்அது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் வீடு என்பதை அடையாளம் காட்டுவதற்காக மட்டுமே, யாரும் அங்கு சென்றுவிடக் கூடாது; மேலும் பிறரும்பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காகஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாகத்தான் மாநில அரசுகள் இந்த நோட்டீசை ஒட்டுகின்றன. எனவே இதுமத்திய அரசின் எந்த ஒரு உத்தரவும் கிடையாது என்று  தனது வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்த நோட்டீஸ் ஒட்டப்படுவது தனிமனித உரிமையை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கப்படுகிறார்களே? என்ற கேள்வியையும் தங்களுடைய வருத்தத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் டிசம்பர் 9 அன்று தீர்ப்பில், தேவை இல்லாமல் உரிய உத்தரவின்றி எந்த அனுமதியும் இல்லாமல் இது போன்ற நோட்டீசை ஒட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேவைப்படும் பட்சத்தில் மட்டும்உரிய அமைப்பிடம் இருந்து அனுமதிபெற்ற பின்னரே நோட்டீஸ் ஒட்டவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்; அதை உச்சநீதி மன்றம் பதிவு செய்கிறது. 

;