court

img

ஹிஜாப் வழக்கு: நீதி நின்று வாதாடுகிறது!

இது சினிமாவில் வரும் கோர்ட் சீன் அல்ல... செப்டம்பர் 7, 2022 அன்று உச்சநீதிமன்றத்தில் “ஹிஜாப்” தடைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் (ஐஸட் ஷிபா -எ- கர்நாடக அரசு)  நடைபெற்ற வாதங்கள். 

ஹிஜாப் தடைக்கு எதிராக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவதத் காமத் வாதங்கள் மீது நீதிபதி  ஹேமந்த் குப்தா தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பே இது. 

வழக்கறிஞர் காமத்:  அரசியல் சட்டப் பிரிவு 19 தந்துள்ள கருத்து சுதந்திரம் என்பது உடை தெரிவு சுதந்திரத்தையும் உள்ளடக்கியதுதான். இருந்தாலும் நியாயமான கட்டுப்பாடுகள் இருக்க லாம். மனுதாரர் சீருடையை எதிர்க்க வில்லை. தலையில் “ஸ்கார்ஃப்” கட்ட அனுமதிக்குமாறுதான் கேட்கிறார். 

நீதிபதி குப்தா:  நீங்கள் தர்க்கமற்ற எல்லை க்கு போகக் கூடாது. உடை தெரிவு சுதந்திரம் என்பது உடையின்றி வரு கிற சுதந்திரத்தையும்உள்ளடக்கியதா?

வழக்கறிஞர் காமத்: யாரும் உடையின்றி பள்ளிக் கூடங்களுக்கு வருவதில்லை. கேள்வி என்னவெனில், கூடுதல் ஆடை அணியக் கேட்பது அரசியல் பிரிவு 19 க்குள் வருமா? வராதா? என்பதே. அதைக் கட்டுப்படுத்த முடியுமா?

நீதிபதி குப்தா:  மிடி, மினி, ஸ்கர்ட் ஆகிய  உடைகளில் அவரவர் விருப்பத்திற்கு வரலாமா? 

வழக்கறிஞர் காமத்:  குவாசுலு, நேட்டால் & இதரர் (எ) பிள்ளை வழக்கில் தென்  ஆப்ரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ் இந்து மாணவியை மூக்குத்தி அணிய அனுமதித்தது. 

நீதிபதி குப்தா:  மூக்குத்தி மத அணிகலன்  அல்ல. உலகம் முழுக்க பெண்கள் இப்படி அணிகலன்களை அணி கிறார்கள். மதத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. 

வழக்கறிஞர் காமத்: நேர்மறை மதச் சார்பின்மை (positive secularism), எதிர் மறை மதச் சார்பின்மை (negative secularism) என இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. கல்வி நிலையங்களில் ஹிஜாபை தடை செய்த அரசாணை நேர் மறை மதச் சார்பின்மைக்கு எதிரானது. அது ஒரு மதக் குழுவை குறி வைப்பது. 

நீதிபதி குப்தா:  அரசாணை குறித்த உங்கள்  பார்வை தவறானது. ஒரே ஒரு சமூகம்  மட்டுமே இங்கே மதச்சார்பு உடை யை கேட்கிறது. 

வழக்கறிஞர் காமத்:  ஒரு சமூகம் மட்டு மல்ல. நாமம், ருத்ராட்சம், சிலுவை என எல்லோரும் இத்தகைய அடை யாளத்தை நாடுகிறார்கள். 

நீதிபதி குப்தா: ருத்ராட்சம், சிலுவை எல்லாம் ஹிஜாப் போன்று வெளியே தெரிவதில்லை. அவை எல்லாம் ஒழுங்கை மீறுவதில்லை.

வழக்கறிஞர் காமத்:  ஒரு பொருள் வெளியே தெரிகிறதா? இல்லையா? என்ப தல்ல பிரச்சனை. நியாயமான ஏற்பு தான் (reasonable accomodation) தேவை. 

(தகவல் ஆதாரம் : 
லைவ் லா 07.09.2022)
எது நியாயம், நீதி என்ற முடிவுக்கு மக்கள் வரட்டும்!.
- கே.எஸ்.

;