court

img

கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகள் 8 பேருக்கு ஜாமீன்!

2022-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 8 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன.

இதை அடுத்து, தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கல் எரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஃபரூக் என்பவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. அவர் 17 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. 

இந்த வழக்கில் மேலும் பலர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 8 பேருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.