cinema

img

“மாஸ்” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

“டுமீல்..டுமீல்...அமெரிக்கா!” துப்பாக்கி வைத்துக்கொள்ளக் கட்டு பாடுகள் எதுவுமற்ற நாடு உலகி லேயே”அமெரிக்கா”தான். மன அழுத்தத்தால் மனநலம் பாதிக் கப்பட்டவர்கள் பள்ளிக்கூடங்களில் வணிக வளா கங்களில் பூங்காக்களில் என்று மக்கள் கூடுமிடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திக் கொலைவெறித் தாண்டவம் நடப்பது அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. அமெரிக்கப் பள்ளி ஒன்றில் சக மாண வனைச் சுட்டுக்கொன்றவனின் பெற்றோ ரும்,கொல்லப்பட்ட மாணவனின் பெற்  றோரும் சந்தித்து நேருக்குநேர் அமர்ந்து, இரண்டு பிள்ளைகளின் இழப்பு குறித்து  விவாதிக்கின்ற படமே “Mass”.(தொழு கைக் கூட்டம்) இதனை உணர்வு, உளவியல்,சமயம் இவற்றோடு நெருக்கமாக நின்று நுட்ப மாகவும் விவாதிக்கின்றது. 

ரிச்சர்ட் மற்றும் லிண்டா பெற்றோர் களின் மகன் ஹெய்டன். ஆறு வருடத்திற்கு முன் தான் படித்த  பள்ளியில் துப்பாக்கியால் பத்து மாண வர்களைக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டவன். இறந்த பத்து மாணவர்களில் ஜேய் மற்  றும் ஹெய்ல் பெற்றோரின் மகன் இவா னும் ஒருவனாவான்.மாபெரும் துய ரத்தில் சிக்குண்ட ஐம்பது வயதை கடந்த  இவ்விரு பெற்றோர்களை நேரில் சந்திக்க  வைத்து உரையாடி, மனக்காயங்களை ஆற்ற, எபிஸ்கோபல் தேவாலயம் (Episcopal Church)ஏற்பாடு செய்கிறது. தேவாலய நிலத்தடி கூடத்திலுள்ள வட்டமேசையில் இரு பெற்றோரும் எதிர்  எதிரே அமர்கின்றனர். நீண்ட மௌனத்திற்கு பிறகு பாதிப்பை  உண்டாக்கிய ஹெய்டனின் பெற்றோர், இவானின் பெற்றோருக்கு பூங்கொத்து  கொடுத்து உரையாடலை தொடங்கு கின்றனர். இரு குடும்பங்களின் பிற உறுப்பினர் களது நலன்களை பரஸ்பர விசாரணை செய்கிறார்கள். இவானின் தாய்தந்தையர் அவனது விளையாட்டு திறமைகள் குறித்து புக ழாரம் சூடி மகிழ்கின்றனர். லிண்டா, இறந்து போன தனது கொலைகார மகன் ஹெய்டன் நேசித்த  நத்தையை வளர்க்க பயன்படுத்திய கண்  ணாடி ஜாடியை காண்பிக்கிறாள். இதனை பள்ளிக்கு எடுத்துச் சென்று ஆசிரியர் களின் கோபத்திற்கு ஆளான கதையை விளக்குகிறாள்.”Call of Duty”போன்ற வீடியோ விளையாட்டுகளை இரவு முழு வதும் விளையாடியதையும்,தான் கண்டித்ததையும் குறிப்பிடுகிறாள். ஹெய்டன் நன்றாகப் படிப்பவன். சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்ப னென்று யாரும் கிடையாது.இவனது அண்ணனின் மேல் படிப்பு செலவு குறித்தே தங்களது கூடுதல் கவனம் இருந்ததாக ரிச்சர்ட் குறிப்பிடுகிறார். இவ்வாறு உரையாடல் வெவ்வேறு தளங்களில் நடைபெறுகிறது. ஒருவரை யொருவர் மென்மையாக காயப்படுத்தி யும், ஒருவர் மீது மற்றொருவர் பழி போடும் முயற்சிகளும் நடக்கின்றன.  இறுதியில் இருதரப்பில் ஒரு தரப்பான  ஜேய் மற்றும் ஹெய்ல்-ன் அன்பு மகன் இவானை சுட்டுக் கொன்ற ஹெய்டனின்  பெற்றோரான ஒரு பாவமும் அறியாத ரிச்சர்ட் மற்றும் லிண்டாவை மனதார மன்  னிக்கிறார்கள். அன்பென்ற ஒற்றை புள்ளி யில் இணைந்து,வட்ட மேசையை கடந்து,  நால்வரும் வட்டமாக கைகோர்த்து மத முறைப்படி கண்ணை மூடி வழிபடுகிறார் கள். தேவாலய பாடகர் குழுவின் ஓத் திகை பாடலோசை பின்புலத்தில் கேட்க  படம் முடிகிறது. 

ஆரோக்கியமான,ஆழமான உரை யாடலின் வழியில் எவ்வித ஃப்ளாஷ் பேக்  யுக்தியுமின்றி, நால்வரின் அற்புதமான நடிப்பின் மூலம் சிறந்த படைப்பைத் தந்  துள்ளார் இயக்குநர் ஃப்ரான் க்ரான்ஷ்.  பேஷ்பால் விளையாட்டில்,கேட்சர் நிலையில் விளையாடும் இவானிடம், உடைகள் அழுக்கேறி கசங்காமல் விளை யாட அறிவுரை வழங்குகிறாள் தாய் ஹெய்ல்.அப்போது,”உடைகள் கசங்கி புல் கறை படிந்தால்தான் நல்ல  விளையாட்டு வீரன்”எனத் தன் மகன் கூறி யதோடு மட்டுமின்றி தலை முதல் பாதம்  வரை மண்சேறை பூசிக்கொண்டு தன்  எதிரே நின்றதை; தனது கணவனின் கை களை இறுகப் பற்றிக்கொண்டு,அழுதும் சிரித்தும் சொல்கின்றபோது,ஈடு இணை யற்ற நடிப்பை தந்துள்ளார் ஹெய்ல் ஆக  நடித்த மார்தா பிளம்டன்.இவர் ஒரு சமூக  செயல்பாட்டாளரும்கூட. “ஹெய்டன் 1.29 பிற்பகலில் வகுப்ப றையில் நுழைகிறான். கையெறி குண்டை  முதலில் வீசுகிறான்.இதில் இவான் காயப்  பட்டு உயிருக்குப் போராடுகிறான். வகுப்பே அச்சத்தோடு ஹெய்டனை பார்க்கிறது.துப்பாக்கியோடு அடுத்த வகுப்பறைக்குச் சென்று சரமாரியாக குழந்தைகளை சுடுகிறான்.பின்பு ஆறு நிமி டம் கழித்து மீண்டும் 1.35 பிற்பகலுக்கு அவனது வகுப்பிற்கு வந்து அதுவரை  உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இவானின் கழுத்தில் சுட்டுக்கொல்கி றான்”,என ஜேய் கதறி கொண்டே விவ ரிக்கிறார். இதனை காட்சிபடுத்தினால் ஏற்படும் அதிர்ச்சியை காட்டிலும், உணர்வு மேலோங்கிய இவரது சிறப்பான  நடிப்பின் மூலம் இதனை, பார்வையாளர் களின் மனதில் காட்சியாக்கி பல மடங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்; ஜேய் ஆக நடித்த ஜேஸன் ஐஸக்.

“ஒருகொலைகாரனை குழந்தை யாகப் பெற்றெடுத்து வளர்த்ததை குற்ற மாக கருதினாலும், ஹெய்டன் என் அன்புக்  குரிய மகன்”எனக்கூறி கண்ணீர் விடு கின்ற காட்சியிலும்; எப்படியாவது இவான்  பெற்றோர் தங்களை சரியாக புரிந்து மன்  னிக்க மாட்டார்களா?என்ற எதிர்பார்ப்பை  தனது கண்கள் வழியாக வெளிப்படுத்தும் லிண்டா பாத்திரமேற்றுள்ள ஆன் டவுட்  அழகிய நடிப்பைத் தந்துள்ளார். இப்பாத் திரத்திற்காக 2022ம் ஆண்டுக்கான சிறந்த  துணை நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஹெய்டன் வகுப்பறையில் யார் யாரை எப்படி சுட்டான் என்பதையும்; அரசு கொலையுண்ட பத்து மாணவர்களையே பாதிக்கப்பட்டவர்களாக(victim) அறி வித்ததை எதிர்த்தும்; தனது மகனையும் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க  தான் போராடியதையும்; விளக்கும் ரிச்சர்ட் ஆக வரும் ரீச் பிர்னி மேன்மை யான நடிப்பை தந்துள்ளார்.  நால்வரும் நடிகர்கள் என்ற அடை யாளம் தெரியாமல் நிஜப் பெற்றோர்களா கவே காணமுடிந்தது. 

 110 நிமிடம் ஓடும் இப்படத்தின் 90சத வீத படப்பிடிப்பு, நால்வரின் உரையாடல் நடைபெறும் வட்ட மேசையை சுற்றியே படமாக்கப்பட்டுள்ளது.இதனை சிறப்பாக  படமாக்கிய ஓளிப்பதிவாளர் மற்றும்  சலிப்பை தராத மிகச்சிறந்த படத் தொகுப்பை வழங்கிய எடிட்டர், மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.  இறுதி தேவாலய பாடகர் குழுவின் பாடலில் வரும் அன்பின் மெல்லிசை மனதை சாந்தமாக்குகிறது.  காலையில் தேவாலயம் செல்லும் முன் ஊர் மலையடிவாரத்தின் முள்கம்பி  வேலியில் சிக்கிய சிகப்பு ரிப்பன், காற்  றால் படபடப்பதை,ஜேய் காரில் இருந்த வாறே கவனிப்பார். இந்த படபடப்பு இவர்  களிடமும் குடிகொண்டுள்ளது என்பதின்  குறியீடாக இக்காட்சி அமைக்கப்பட்டுள் ளது. சுமூகமான உரையாடலுக்குப் பின் இவர்களது மன படபடப்பு நீங்கியதை, மாலையில் அதே ரிப்பன் காற்றில்லாமல் சலனமின்றி தொங்குவதை படிமமாகக் காட்டியிருப்பர்.  இயக்குநரே திரைக்கதையும் எழுதி யுள்ளார்.சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட் டுள்ளார். சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வே துப்பாக்கி வன்முறைக்கான ஊற்றுக்கண்  என்பதையே இப்படம் மீண்டும் உறுதிப் படுத்துகிறது.ஆனால் இது குறித்து உரையாடலில் கூடுதல் கவனம் செலுத்தி யிருந்தால்,படம் இன்னும் சிறப்பு அடைந்திருக்கும். ப்ரைம் அமேசானில் உள்ளது.

 

;