cinema

img

பாஜகவுக்கு ஆதரவா? கிச்சா சுதீப்புக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு!

பெங்களூரு, ஏப். 7 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த லில், பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை கைகாட்டும் வேட்பாளர் களை எல்லாம் ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதாக அம்மாநிலத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப் வெளியிட்ட அறிவிப்புக்கு மாநி லம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. ஆனால், தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு துவங்கி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் பலவும், கர்நாடகத்தில் இம்முறை பாஜக தோல்வி அடைவது உறுதி, காங்கிரசுக்கே வெற்றிவாய்ப்பு என்று உறுதியாக கூறி வருகின்றன. இத னால், தங்களின் கடைசி ஆயுத மான, சாதி மற்றும் மதவாத அணி திரட்டலை தீவிரப்படுத்தியுள்ள பாஜக, லிங்காயத்துக்கள், ஒக்கலிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை அண்மையில் அறிவித்தது. முஸ்லிம் களின் 4 சதவிகித இடஒதுக் கீட்டைப் பறித்து, இந்து பெரும்பான்மை வாதத்தை தூண்டிவிட்டது. இவை போதாதென்று தற்போது திரைப்பிர பலங்களையும் இழுக்க ஆரம்பித்துள்ளது. பாஜக-வின் இந்த வலையில், கர்நாடக சூப்பர் ஸ்டார்களில் ஒருவ ரான கிச்சா சுதீப் விழுந்தது, கர்நாடக அர சியல் களத்தில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் சேர்ந்து பத்திகையாளர்களைச் சந்தித்த கிச்சா சுதீப், “நான் வணங்கும் மற்றும் பாசத்து டனும், மரியாதையுடனும் நான் மாமா  என்று அழைக்கும் பசவராஜ் பொம்மை க்கு எனது ஆதரவை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்” என்றார். கிச்சா சுதீப்பின் முடிவுக்கு உடனடி யாக அதிருப்தி தெரிவித்தவர், நடிகர் பிரகாஷ் ராஜ்தான். ‘‘கிச்சா சுதீப் கூறியது எனக்கு அதிர்ச்சியும் வேத னையும் அளித்துள்ளது. அன்புள்ள சுதீப்.. எல்லோராலும் விரும்பப்படும் கலைஞனாக.. மக்களின் குரலாக நீங்கள் இருப்பீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனால் நீங்கள் ஒரு அர சியல் கட்சியுடன் உங்களை சாயமிடத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். எனவே ஒவ்வொரு குடிமகனின் கேள்விக்கும் பதிலளிக்க தயாராக இருங்கள்’’ என தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார். மதச்சார்பற்ற ஜனதாதளம் தலை வர் எச்.டி. குமாரசாமி அளித்த பேட்டி யில், “பாஜக ஆட்சியில் வளர்ச்சி பணி கள் எதுவும் நடைபெறவில்லை. இத னால் பிரச்சாரத்திற்காக நடிகர்கள், நட்ச த்திர பேச்சாளர்களை பாஜக-வினர் அழைத்து வருகின்றனர். நடிகர் சுதீப் பாஜக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது, அவரது தனிப்பட்ட விஷயமாகும். இதற்காக நடிகர்கள் பற்றி, நான் கீழ்மட்டமாக பேச விரும்பவில்லை. நடிகர்கள் அனைத்துத் தரப்பு மக்க ளாலும் விரும்ப கூடியவர்கள். அவர் களை ஒரு கட்சிக்கு மட்டும் தேவைப்படு வராக மாற்றக்கூடாது” என்று தெரி வித்தார். மேலும், “சினிமா நடிகர் களைப் பார்க்க மக்கள் கூடுவார்கள் தான், ஆனால் அது வாக்குகளாக மாறு வதில்லை” என்றும் குறிப்பிட்டார்.

 காரணம் இதுதானா?

அதேநேரம், கிச்சா சுதீப்பின் இந்த முடிவு, உண்மையில் அவரால் எடுக்கப்பட்டது இல்லை என்றும், வரு மான வரித்துறை, சிபிஐ போன்ற விசா ரணை அமைப்புகளால் எடுக்கப்பட்ட முடிவு என்று காங்கிரஸின் கர்நாடக பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜே வாலா விமர்சித்தார். “யாரை ஆத ரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு சினிமா நட்சத்திரங் களுக்கு உரிமையுண்டு. ஆனால், சில நேரங்களில் வருமான வரித்துறை – அமலாக்க இயக்குநரகம் அல்லது வேறு ஏதேனும் அமைப்பு முடிவு செய்கிறது. கர்நாடகாவில் பாஜக-வின் தோல்வி நிலை தெளிவாகிறது” என்று கூறிய சுர்ஜேவாலா, “2019-ஆம் ஆண்டில், வருமான வரித்துறை அதி காரிகளால் சோதனை செய்யப்பட்ட சாண்டல்வுட் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில் சுதீப்பும் ஒருவர்” என்று தெரிவித்தார்.

ரசிகர்கள் எதிர்ப்பு

மறுபுறத்தில், சுதீப்பின் ரசி கர்களோ, கிச்சா அரசியலில் ஈடுபடு வதைத் தாங்கள் விரும்பவில்லை என்று #WedontwantKicchchainpolitics என்ற முழக்கத்தை டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முன்னெடுத்துள்ளனர். கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் தொடர்ந்து படங் களில் நடிக்க வேண்டும் என்றும், அர சியல் சதுரங்கக் காயாக பயன்பட்டு விடக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, ஷிமோகாவைச் சேர்ந்த வழக்கறிஞரான கே.பி. ஸ்ரீபால் என்பவர் இந்திய தேர்தல் ஆணை யத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில், “கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் நடித்த படங்களை திரையரங்கு மற்றும் தொலைக்காட்சி களில் வெளியிடத் தடை விதிக்க வேண் டும். மேலும் அவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதோடு, விளம்பர ங்களிலும் நடித்துள்ளதால், இதனை யும் தேர்தல் முடியும் வரை ஒளிபரப்பா மல் இருக்க உத்தரவிட வேண்டும். பாஜக-வுக்கு பிரச்சாரம் செய்வதாக அவர் அறிவித்துள்ளதால் அவரது படம், நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் வாக்கா ளர்களிடம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த  விஷயத்தில் விரைந்து முடிவு எடுத்து அவரது திரைப்படம், நிகழ்ச்சி, விளம் பரங்களை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார். ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த  நடிகர் சுதீப், சூப்பர் ஸ்டார் என்பது டன், அவர் பழங்குடியான வால்மீகி  நாயக்க சமூகத்தைச்சேர்ந்தவர் என்பதால், அவரின் ஆதரவு தங்க ளுக்கு இரட்டை லாபம் என்று கணக்குப் போட்டுத்தான் பாஜக அவரை வளைத்துள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும், “பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் சுதீப்  பங்கேற்பது கட்சிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். கிச்சா சுதீப், தமிழில் ‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘புலி’ உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார்.