cinema

img

நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகும் அமீர்கான்! இதுதான் காரணம்!

நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார். இது அமீர் கான் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகர் அமீர் கான் சாம்பியன்ஸ் படம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது:-
சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை, லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். ஆனால் தற்போது நாய் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன். நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக தற்காலிகமாக நடிப்பிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். 35 ஆண்களாக நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்க இது நியாயமாகாது என கருதுகிறேன். அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணம் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் நேரம் செலவிடும் காலகட்டத்தில் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.