cinema

img

ஷாருக்கானுக்கு வில்லனா விஜய் சேதுபதி..?

தமிழ்ப்பட இயக்குநர் அட்லீ, ராஜா ராணி , தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியிருக்கும் அட்லீ ஜவான் என்ற பெயரில் ஒரு இந்திப்படத்தை இயக்க இருக்கிறார். அதில் நாயகன் ஷாருக்கான். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம். நயனுக்கு இதுதான் இந்தியில் முதல் படம். அவருடன் பிரியாமணி, யோகிபாபு என்று தமிழ்க் கலைஞர்களும் பங்கேற்கும் இந்த ஜவான் படத்தின் வில்லன் பாத்திரத்திற்கு முதலில் தெலுங்கு நடிகர் ராணாவைக் கேட்டார்களாம். அவர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. அதனை அடுத்து அந்த வில்லன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகச் சொல்கிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமாம். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தினை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடத் திட்டமாம்.