cinema

img

ஜமுனாவாகும் தமன்னா..? - சோழ. நாகராஜன்

முதுபெரும் திரைக்கலைஞர் ஜமுனா (86) அண்மையில் மறைந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஜமுனா தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், குழந்தையும் தெய்வமும் முதலான பல படங்களில் நடித்தவர்.  தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமலின் அம்மாவாகவும் நடித்தார்.  1989 ஆம் ஆண்டு ஆந்திராவின் ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மக்கள வை உறுப்பினரானார். 90 களின் இறுதியில்  பாஜகவில் இணைந்தார். மிகச் சிறந்த அவரது நடிப்பிற்காக அவரை ஆந்திராவின் நர்கீஸ் என்றும் புகழ்ந்து கூறுவதுண்டு. அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு பயோபிக் தயாரிக்க முயற்சிகள் நடக்கின்றனவாம். தமிழ் இயக்குநர் ஒருவர் இதனைப் பட மாக்க உள்ளாராம். இதில் ஜமுனாவாக நடிகை தமன்னாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பதாகக் கூறுகிறார்கள்.

;