cinema

img

பாட்டுக் குயிலைப் போற்றிப் பாடுக...

இதுவரையில் அவர் பாடியிருப்பது 17 ஆயிரத்து 695 பாடல்கள் என்கிறது ஒரு துல்லியக் கணக்கு. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்றும் இந்தி என்றும் இன்னும் பல மொழிகளிலும் பாடி, பரவசத்தைக் கேட்போருக்கு ஏற்படுத்திய இசைக்குயில் பி.சுசீலாவுக்கு இன்னுமொரு மகுடம் கிட்டியிருக்கிறது.  தென்னகத்தின் லதா மங்கேஷ்கர் என்றழைக்கப்படும் அவரது இசைச் சாதனைக்கு மதிப்பளிக்கும் வகையிலும் உலக மகளிர் தினத்தையொட்டியும் இந்திய அஞ்சல்துறை சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை வெளியிட்டிருந்தது.  அதனை இரு தினங்களுக்கு முன்னர் பி.சுசீலாவின் இல்லத்தில் வைத்து வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. அவரது 69 ஆண்டுகால இசைச் சேவைக்கான நல்லதொரு அங்கீகாரமாக ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தனது தாய்மொழி தெலுங்கு என்றபோதிலும் தமிழில்தான் தான் அதிகப் பாடல்களைப் பாடியிருப்பதாகவும் தமிழையே தனது தாய்மொழிபோலக் கருதுவதாகவும் அந்த இசையரசி மொழிந்திருக்கிறார்!

;