cinema

img

சரத்பாபு உடல் சென்னையில் தகனம்

சென்னை, மே 23- தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத் பாபுவின் உடல் செவ் வாயன்று (மே 23) சென்னையில் தகனம் செய்யப்பட்டது. நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தி லுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கல்லீ ரல், சிறுநீரகம் மற்றும் நுரை யீரல் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் ‘வென்டிலேட்டர்’ (செயற்கை சுவாசம்) மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், செவ்வாயன்று (மே 22) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவ  ரது உடல் ஹைதராபாத் ஃபிலிம் சேம்பரில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இரவு  ஒன்பது முப்பது மணிக்கு மேல் அஞ்  சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட் டது. தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அவரது  உடல் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. தமிழ் திரைப்பட உலகத்தினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். திமுக  தரப்பில் கனிமொழி எம்பி மலர ஞ்சலி செலுத்தினார். பிறகு மாலை யில் கிண்டியிலுள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, முதலமைச்சர் கள் மு.க.ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரி வித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

;