cinema

img

பொ.செ. 2 போல நீர்ப்பறவை 2 ... - சோழ. நாகராஜன்

பொ.செ. 2 போல நீர்ப்பறவை 2 ... பொன்னியின் செல்வன் 1 ஆம் பாகத்தைத் தொடர்ந்து அதன் 2 பாகம் உருவாக இருப்பது தெரிந்த செய்திதான். அதுபோலவே இன்னும் பல படங்களின் 2 ஆம் பாகங்களும் தயாராக இருக்கின்றன. கமலின் இந்தியன் 2 அவற்றில் எல்லோரும் அறிந்த ஒன்று. அதேபோல சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்த நீர்ப்பறவை திரைப்படத்தின் 2 பாகமும் வர இருக்கிறதாம்.  இதனைத் தனது டுவீட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, ‘‘நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப் பெருமக்களுக்கும் நன்றி!’’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல ஜெய்பீம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு கண்டிப்பாக உருவாகும் என்று பதிலளித்துள்ளார் அதன் இயக்குநர் த.செ.ஞானவேல். 

;