cinema

img

புதியன விரும்பும் பார்த்திபன்... - சோழ. நாகராஜன்

தமிழ் சினிமாவில் பலரும் புதிய புதிய கதையாடல்களை, கதை சொல்லும் உத்திகளை, தொழில்நுட்பப் புதுமைகளைப் புகுத்தியே வருகிறார்கள். என்றாலும், முற்றிலும் புதிய புதிய வகைமைத் திரைப்படங்களைத் தருவதில் இயக்குநர் பார்த்திபன் முன்னிலையில் இருப்பவர் என்றால் அது மிகையில்லை. 

அந்தவகையில், அண்மையில் அவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் இரவின் நிழல்.  ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் இதில் அவர் செய்துள்ள வியக்கவைக்கும் புதுமை, இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பதுதான். சிங்கிள் ஷாட் மூவி என்றே இதனைச் சொல்கிறார்கள். கேமிராவை முடுக்கிவிட்டால் படம் முழுவதையும் எடுத்துவிட்டுத்தான் மறுபடியும் கேமிரா இயக்கத்தை நிறுத்த வேண்டும். படப்பிடிப்புக்குப் பின்னான பணிகளில் எடிட்டிங் என்பதே இருக்காது. பின்னணிக் குரல், இசை சேர்த்தல் போன்ற பணிகள் மட்டுமே செய்துகொள்ளப்படும். இப்படியொரு புதுமை என்பது தமிழுக்கு இதுவே முதல்முறை. ஹாலிவுட்டிலும் பிற தேசங்கள் - மொழிகளிலும் இந்தவகைப் படங்கள் ஏற்கெனவே வந்திருந்தாலும் தமிழில் இந்த முயற்சியை மேற்கொண்டதற்காகவே பார்த்திபனைப் பாராட்டத்தான் வேண்டும்.