cinema

img

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் வில்லன்... - சோழ. நாகராஜன்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். ஸ்டூடியோ ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் தயாரிக்கும் இந்தப் படம் கோலார் தங்கவயலில் தமிழர்கள் பட்ட துயரங்களைச் சொல்வதாக இருக்குமாம். இதில் விக்ரமுக்கு வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோனே என்பவர் நடிக்க இருக்கிறாராம். அவர் தி பியானிஸ்ட்  என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர். தி பீச், லாரா கிராப்ட் டாம் ரைடர் போன்ற படங்களிலும் நடித்தவர். முதல்முறையாக இந்தப் படத்தில் ரஞ்சித்துடன் ஜி.வி.பிரகாஷ் இணைவதாகவும் செய்திகள் கூறுகின்றன.