மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் - கௌரி கிஷன் இணைந்து நடித்திருக்கும் புதிய படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கும் இந்தப் படத்தைத் திட்டம் இரண்டு விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். படத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘அடியே’. இதென்ன இந்தக் காலத்திலும் இப்படியொரு பெயர்? ஆம்பளப் புத்திக்கு இன்னும் ஒரு கேடும் வராமல்தான் இருக்கிறது!