cinema

img

யாதும் ஊரே; யாவரும் கேளிர் - திரைப்பட அறிமுகம்

பியானோ இசைக் கலைஞனாக வாழ்தலின் நெருக்கடியில் தன்னை வளர்த்துக் கொண்ட நாடற்ற வீடற்ற அகதி புனிதனின் இசைக்குறிப்பு லண்டன் ராயல் ஆர்கெஸ்ட்ரா குழுவால் தேர்வு செய் யப்படுகிறது. விருதை அங்கீகாரத்தை புனிதன் பெற நாடும் வீடும் அற்ற அகதிக்கு லண்டன் போக கடவுச்சீட்டு யார் தருவார்? எப்படித் தருவார்? இதன் வழியாக உலகெங்கும் இருக்கிற வாழ நிலமற்ற அகதிகளின் பிரச்சனைகளை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைமொழியில் பேசுகிறது. நூற்றாண்டு கடந்த தமிழ்சினிமாவிற்கு அகதியாக இருப்பதன் வலி புதியது. இந்தப் புதிய வலியின் வழியாக ஒவ்வோர் நாடும் இது குறித்து பாராமுகமாக இருப்பதை செல்லு லாய்ட் பிம்பத்தின் வழி அழகியலாக இசை வழியாக கேள்விகளுக்கு உட்படுத்துகிறது வெங்கடகிருஷ்ண ரோகாந்தின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.’ இலங்கை மூன்றாம் யுத்த காலச்சூழலில் கண்டி கடற்கரையில் பாதர் ராஜேஷால் தனக் கான தொடர்புகள் வழி லண்டன் ராயல் ஆர்கெஸ்ட்ரா நிறுவனத்தில் இசை பயில அனுப்பப்படுகிற பொடியன் புனிதன் லண்டன் போனானா? இலங்கைப்படை இவர்களை கடந்து போக அனுமதித்ததா? என்ன ஆனான் புனிதன் என்பதை தடக் தடக் என்ற வேக மான திரைக்கதை மொழியில் திருப்பங்கள் கொண்ட காட்சி மொழியில்  இசக்கிதுரை தயாரிப்பில் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர்.கடற்கரை, மலைகள், சமவெளி என படம் பிரம்மாண்டமான காட்சி மொழியாக எடுக்கப்பட்டு பார்வையாளர்க ளைக் கவர்கிறது.

இஸ்லாம் பெண்ணால் கண்டெடுக்கப் படும் சிறுவன் அருட்தந்தை ஒருவரால் வளர்க்கப்பட்டு, மலையாள தேசத்தில் மனி தாபிமானம் நிறைந்த செங்கொடி சேட்டன் மார்களால் பராமரிக்கப்பட்டு , கிருத்துவ தேவா லயம், இசைக்குழு போன்ற பின்னணியில் நேசிக்கப்படும் புனிதன் என சம்மந்தப்பட்ட காட்சிகள் அதன் பாத்திரங்கள் வெவ்வேறு மத நிலச் சூழலிலும் ஆண்கள் பெண்களால் வெளிப்படுத்தும் உணரப்படும் நேசம் என மனிதர்கள் மீதான நேசத்தை பட்டுப்போகாமல் கைமாற்றும் வண்ணஜாலத்தை படம் நிகழ்த்துகிறது. யாழ்ப்பாணம் ஆறுமுகமாக வருகிற கரு. பழனியப்பன் பாத்திர அமைப்பு அந்த பாத்தி ரம் வெளிப்படுத்தும் நேசம் முன் வைக்கும் ஆலோசனை படத்தின் இன்னொரு தடமாகப் பிரிந்து படத்தை விறுவிறுப்பாக்குகிறது. தாயும் மகளுமாக வருகிற ஸ்ரீரஞ்சனி, மேகா ஆகாஷ் காட்சிகள் நேசிக்க வைக்கிற காட்சிகளாக வந்திருக்கின்றன.விஜய் சேதுபதி மேகா ஆகாஷ் இடையே ஊடாடுகிற  உணரப்படுகிற நட்பை அன்பை காதலை ஒரு கண்ணசைப்பில் ஆமோதிக்கிற தாயாக ஸ்ரீரஞ்சனி இருப்பது அழகு. சட்டைக்கு மாட்ட ஊக்குபின் தாங்கோ என போலீஸ் விசாரணையில் மன்றாடுகிற காட்சி முதல் தான் பங்கேற்கிற எல்லாக் காட்சி களிலும் அக்கா கனகராணி பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் கனிகா.

அகதிகளுக்கு உதவும் அருட்தந்தை சேவியராக விவேக் அசத்துகிறார்.யாருய்யா அந்த டிஐஜி என யோசித்தால் இயக்குநர் மகிழ்திருமேனி  வந்து மிரட்டுகிறார்.சில காட்சி களில் வருகிற அருட்தந்தை ராஜேஷ் அத்தனை நேர்த்தியாக யாழ்ப்பாண தமிழ் பேச கேட்பது ஆனந்தம். உலகத்தின் முன் அகதிகள் பிரச்சனை பற்றி பேசுகிற காட்சிகளில் இயலாமையை ஏக்கத்தை தவிப்பை தனது முக பாவனை களில் அப்படியே கைமாற்றுகிறார் மக்கட் செல்வன் விஜய்சேதுபதி.சேதுபதி ,மேகா ஆகாஷ் சம்மந்தப்பட்ட அருகாமைக் காட்சி கள் ஒவ்வொன்றும் காதலர்களுக்கு மன வெழுச்சி தரும் காட்சிகளாக  வந்து ஈர்க்கின்றன. தமிழ்நாட்டு அகதிமுகாம் ஒன்றின் தலை வராக அய்யப்பசாமியாக வரும் கதைசொல்லி பவாசெல்லத்துரை அசலாக பொருந்தி நிற்கிறார்.பிரான்ஸ் வி.றி.இளங்கோவனும் படத்தில் இருக்கிறார். படத்தின் வேகம் திருப்பம் மிரட்டலிற்கு பெரியதாக உதவுகின்றது விவேக் கே. பிரசன் னாவின் இசை.விஜய்சேதுபதியை மகிழ்திரு மேனி தேடுகிற மலைக்காட்சிகளில் விவேக் பிரசன்னா பின்னணி இசை மிரட்டலாக வந்து இசை யாரென கேட்கச் செய்கிறது.

இந்தியாவில் நாற்பதாண்டுகளாக உயிரைப் பிடித்து வாழ்ந்து வரும் ஒன்றரை லட்சம் அகதிகளுக்கான குடியுரிமைப் பற்றி  தமிழ்நாட்டு கட்சிகள் பேசி வருகிற சூழலில், இலங்கையின் இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு சார்ந்த தளபதிகள் தலைவர்கள் அதிகாரிகள் தண்டிக்கப்படாத சூழலில், தமிழில் முதல் முறையாக ஒரு வெகுசன திரைப்படத்தில் அகதிகள் வாழ்வுரிமை பேசுபொருளாகி யிருக்கிறது.  ஐக்கிய நாட்டு சபை அகதிகள் பற்றி 1950 களில் இயற்றிய தீர்மானங்கள் யாத்த பின்ன ணியில், தமிழர்கள் அகதிகள் வாழும் நில மெங்கும் வாழ்வுரிமை அற்றவர்களுக்கு குறிப்பாக தமிழ் அகதிகளின் பக்கம் நின்று அற்புதமான திரைமொழியில் அகதிகளின் வலியை உணர்த்திய இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் பாராட்டுக்குரியவர்.தன் முதல் படத்திலேயே உலகத் தமிழர்களை ஈர்த்திருக்கிறார் ரோகாந்த். குடிபெயர வைக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை பரவலான பேசு பொருளாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.’

- இரா.தெ.முத்து

;