இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் புதிதாக வெளியிட இருக்கும் படம் பிகினிங். இது ஒரு புதுமையையும் நிகழ்த்த இருக்கிறது. ஆசியாவிலேயே முதல் படம் என்று பெயரெடுக்கப் போகும் அந்தப் புதுமைதான் ஒரே திரையில் இரண்டு படங்கள் என்பது. அதைப் பிளவுதிரை (split screen) என்கிறார்கள். மிகவும் சவாலான இந்தப் புதிய முயற்சியில் ஒரே நேரத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படுமாம். வலது பக்கம் இன் னொரு கதை ஓடுமாம். அதாவது ஒரே திரையில் இரண்டு படங்கள் ஓடப்போகின்றன. ஆனால், ரசிகர்களை அது குழப்பாதாம். ஒன்று டிராமா, மற்றொன்று திரில்லராம். முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்க்கிற அனுபவத்தை ரசிகர்கள் பெறப்போகிறார்கள் என்கிறார்கள். லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியி ருக்கும் இந்தப் படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகி போன்றோர் நடித்திருக்கிறார்கள். அண்மையில் வெளியான ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்கிரீன் படமான இதன் முன்னோட்டமே எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறதாம்.